search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபர்மதி ஆசிரமம்"

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிரசாரத்தை தொடங்க உள்ள காங்கிரஸ் தலைவர்கள், சபர்மதி ஆசிரமத்தில் இன்று பிரார்த்தனை செய்தனர். #CongressWorkingCommittee #CWCMeeting #SabarmatiAshram
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது. கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 58 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலத்திற்கு வந்திருந்த சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் இன்று காலை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர்.  மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றனர்.



    வல்லவாய் படேல் தேசிய நினைவிடத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. காரிய கமிட்டி கூட்டம் முடிவடைந்ததும் கட்சி சார்பில், பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய அறிக்கை வெளியிடப்படும்.

    காரியக் கமிட்டிக் கூட்டத்திற்குப் பிறகு காந்திநகரின் அடலாஜ் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

    சமீபத்தில் அரசியலுக்குள் அடியெடுத்து வந்த பிரியங்கா காந்தி பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #CongressWorkingCommittee #CWCMeeting #SabarmatiAshram
    6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள செஷெல்ஸ் அதிபர் டேனி பவுரி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். #Seychelles #SabarmatiAshram #DannyAntoineRollenFaure
    காந்திநகர்:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ் ஆகும். செஷல்ஸ் நாட்டில் உள்ள ஒரு தீவில் கடற்படை தளம் அமைப்பதற்காக இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 6 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி இன்று இந்தியா வந்தடைந்துள்ளார்.

    இதையடுத்து, இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக சபர்மதி ஆசிரமத்தின் வருகை பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.



    அந்த பதிவில் ‘வன்முறைக்கு எதிரான அகிம்சை எனும் கொள்கையை நாம் நமது குழந்தைகளுக்கும் இந்த உலகத்துக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்’  என குறிப்பிட்டுள்ளார்.

    வரும் திங்களன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, செஷல்ஸ் அதிபர் டேபி பவுரி சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. #Seychelles #SabarmatiAshram #DannyAntoineRollenFaure
    ×